கருணாநிதி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 


தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர்,


கருணாநிதி மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.