"கிளாஸில நுரையும் ப்ளேட்ல கறியும்" என்ற முகநூல் குழு மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, கேரளா மாநிலத்தில் மதுவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேகொந்த் வருகிறது. இந்நிலையில், மதுவுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ஒரு முகநூல் குழுவை துவங்கியுள்ளனர். அந்த குழுவின் பெயர் "கிளாஸில நுரையும் ப்ளேட்ல கறியும்" என்று வைத்துள்ளனர். 


அந்த குழுவில், இதுவரை சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருகின்றனர். இந்த குழுவில் முழுக்க முழுக்க மதுபழக்கத்திற்க்கு ஆதரவான புகைப்படங்களும், கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளனர். மேலும், இந்த குழுவில் சிறுவர்களின் கைகளில் மது உள்ளது போன்ற புகைப்படங்கள் பதிவு செய்யபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து, அம்மாநில ஆணையர் அந்த முகநூல் குழு மீது வழக்குபதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த குழு மீது காவல்துறையினர் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரிவின் கீழும் வழக்கு பதிவு வழக்குபதிவு செய்துள்ளனர். 


இந்த குழுவின் அட்மின் பி.அனிகுமார் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர் திருவனந்தபுரைத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளதையடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.