Viral Video: தார் சாலை தங்க சாலையாக தெரியும் கடவுளின் தேசம் கேரளாவுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்
கேரளாவில் பெருமழையில் பாதிக்கப்பட்ட தார் சாலை, புதுப்பிக்கப்பட்ட பின்னர் கணகவர் அழகை பெற்றுள்ளது.
கொரோனா வைரஸூக்குப் பிறகு சுற்றுலாத்துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக கேரள மாநிலம் சுற்றுலாவில் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பத் தொடங்கியிருக்கிறது. பெரு வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாநிலம், கொரோனா வைரஸ் வந்ததும் முற்றிலுமாக முடங்கியது. இதில் இருந்து மீள்வதற்காக அம்மாநிலம், பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு பலனாக இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பிரதேசத்தில் புதுப்பிக்கப்பட்ட தார்சாலை, பசுமை போர்த்திய மலைகளுக்கு நடுவே பளிச் சென்று மிளிர்ந்து காண்போரை வியக்க வைக்கிறது.
மேலும் படிக்க | FOODIES கவனத்திற்கு: பானிபூரில் ஷேக் சாப்பிட்டு இருக்கீங்களா?
மன இறுக்கம், வேலை என்று மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் இதுபோன்ற வீடியோக்கள் இளைப்பாறும் கூரையாக இருந்தாலும், இத்தகைய அனுபவங்களை நேரில் அனுபவிக்கும் சுகமே தனி. சுவிட்சர்லாந்து, இமயமலை என கேள்விப்பட்டு பெரும் கற்பனையோடு சுற்றிக்கொண்டிருக்கும் நாம், நமக்கு அருகில் இருக்கும் கடவுளின் தேசத்தில் கொட்டி கிடக்கும் இயற்கையின் பேரழகை பார்க்க தவறிவிடாதீர்கள். பனி மற்றும் மழைக்காலம் தொடங்கியவுடன், அந்த பூமியை நீங்கள் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் சொர்கத்தில் இருக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உணர்வீர்கள்.
வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காட்சியானது கொச்சி டூ தொண்டி செல்லும் சாலையாகும். மூணாறு வழியாக பயணிக்கும் இந்த சாலையின் இருபுறத்திலும் இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கிறது. குடும்பத்தோடு ஒரு முறை இந்த சாலையில் சென்று பயணித்து வாருங்கள். அலாதியான இன்பமும் மகிழ்ச்சியும் உங்களை அறியாமல் பொங்கிக் கொட்டும். பணத்தின் மீதான ஆசையும், மனிதர்களின் மீதான வெறுப்புகளும் பறந்துபோய், உளப்பூர்வமான உங்களை உணரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதனைத் தானே நாம் தேடிக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் உணருவீர்கள். அப்படியான பயண அனுபவம் இந்த சுற்றுலாவில் கிடைக்கும்.
மேலும் படிக்க | நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ