பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், இப்போது சமூகவலைதளங்களில் பரவியிருக்கும் வீடியோவில் பாம்பு ஒன்றை பொம்மை போல் பிடித்து விளையாடுகிறது பிஞ்சுக் குழந்தை. பாம்பை பார்த்தாலே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சிலர் ஓடும் நிலையில், இந்தக் குழந்தை பாம்பை கையில் பிடித்து சிரித்துக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’; கண் கலங்க வைக்கும் காட்சி!


சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், குழந்தையின் கையில் இருக்கும் பாம்பு பச்சை நிறத்தில் உள்ளது. சிறிய பாம்பாக இருக்குமோ? என நினைத்தால் அதுவும் இல்லை. நல்ல மொரட்டு ஜீவனாக இருக்கிறது அந்த பாம்பு. வளைந்து நெளியும் அந்தப் பாம்பை சிறுவன் இறுக்கி பிடித்திருக்கிறான். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘டேய் தம்பி அது பாம்புடா..’ ’பாம்பு என்பதாவது உனக்கு தெரியுமா?’ என கமெண்ட் அடித்துள்ளனர். சிலர், பாம்பை பார்த்தாலே விஷப்பாம்பு மாதிரி இருக்கிறது. அதை எப்படி குழந்தையின் கையில் பெற்றோர் கொடுக்கலாம்? என குழந்தையின் பெற்றோர் மீது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.



விஷமில்லாத பாம்பு என்றால் கூட குழந்தையின் கையில் விளையாடுவதற்கு கொடுக்கலாமா? என வினவியுள்ள நெட்டிசன்கள், தங்களின் பயத்தையும், கோபத்தையும் ஸ்மைலிகளாக (Smiley) பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர், குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட வைப்பது தவறல்ல, ஆனால் அவற்றின் இயல்புகளை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி 18 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரியாக்ட் செய்துள்ளனர். 


ALSO VIDEO | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR