Offer Sale! முதன்மை ஸ்மார்ட்போன்களில் அதிரடி விலை குறைப்பு...
பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை துவங்கியுள்ள நிலையில், முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை துவங்கியுள்ள நிலையில், முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை மார்ச் 18 இரவு துங்கியது. இந்த சலுகை விற்பனையானது அனைத்து பிளஸ் உறுப்பினர்களுக்கும் இரணு 8.00 மணிக்கும், அதிகாலை 12.00 மணிக்கு மீதமுள்ள பயனர்களுக்கும் தொடங்கியது. இந்த நான்கு நாள் பிளிப்கார்ட் விற்பனை மார்ச் 22 அன்று நீடிக்கிறது.
மேலும் இந்த விற்பனையின் போது, SBI கிரெடிட் கார்டுகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது ஸ்மார்போன் ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கான சில பட்டியலிடப்பட்ட விருப்பங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Poco X2
தற்போது பிளிப்கார்ட்டில் திறந்த விற்பனைக்கு வரும் Poco X2 வாங்கும் போது வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது (SBI வங்கி கடன் அட்டைகளில் ரூ.1,500 வரை தள்ளுபடி)
விலையைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் மூன்று சேமிப்பு வகைகளில் வருகிறது - 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு ரூ .15,999, 6 ஜிபி ரேம் +128 ஜிபி சேமிப்பு ரூ .16,999, மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜி சேமிப்பு ரூ .19,999 ஆகும். இது அட்லாண்டிஸ் ப்ளூ, பீனிக்ஸ் ரெட், மேட்ரிக்ஸ் பர்பில் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
iQOO 3
உங்கள் ஆர்டர் ப்ரீபெய்ட் செய்யப்பட்டால், பிளிப்கார்ட் விற்பனையின் போது iQoo 3 ரூ .5,000 தள்ளுபடியில் கிடைக்கும். அதோடு, SBI வங்கி கிரெடிட் கார்டிலும் ரூ .1,500 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
விலையைப் பொறுத்தவரை, iQOO 3 4G இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது - 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .36,990 மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .39,990. 5ஜி வேரியண்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதன் விலை ரூ .44,990 ஆகும். அதேவேளையில் இது டொர்னாடோ பிளாக், குவாண்டம் சில்வர் மற்றும் எரிமலை ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realme 5 Pro, Vivo Z1 Pro மற்றும் பல
இந்த சலுகை விற்பனையின் போது Redmi Note 7 Pro தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Redmi Note 7 Pro ஆனது ஆரம்ப விலையில் ரூ.11,990 க்கு விற்கப்படுகிறது. அதேவேளையில் Vivo Z1 Pro-வின் ஆரம்ப விலை ரூ.11,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அதன் தற்போதைய விலையிலிருந்து ரூ.1,000 குறைவு காணுகிறது. Realme 5 Pro விஷயத்திலும் இந்த நிலைமையே நீடிக்கிறது. ஏனெனில் இது தற்போதைய விலையிலிருந்து ரூ.3,000 குறைந்து ரூ.11,999-க்கு விற்கப்படுகிறது.