இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணமாகிய நிலையில், லாக்டவுன் சமயத்தில் அனுஷ்கா கர்ப்பம் தரித்ததாக செய்தி வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதை தொடர்ந்து, அந்த தம்பதியர் மட்டுமின்றி, அவர்களது ரசிகர்களும், புதிய ஜீவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
ஏற்கனவே மருத்துவர்கள், ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று கூறியதை அடுத்து, ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விராட் கோலி (Virat Kohli), பாதியிலேயே விலகி, தனது மனைவி அனுஷ்காவுடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.


இந்நிலையில், இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் விராட் கோலி  செய்தியை வெளியிட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.



விராட் மற்றும் அனுஷ்காவிற்கு (Anushka Sharma) புதிதாக பிறந்த மகளுக்கு பாபா அனந்த் மகாராஜ் பெயர் சூட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


விராட் மற்றும் அனுஷ்காவின் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளில் மகாராஜா அனந்தின் பங்கு நிச்சயம் இருக்கும். இருவரும் கடந்த காலங்களில் மகாராஜா அனந்தின் கருத்துக்களுக்கும் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இது அவர்களின் திருமணம் தொடர்பான முடிவானாலும் சரி, அல்லது புதிய வீடு வாங்குவது என்றாலும் சரி. அந்த தம்பதியினர் எப்போதும் பாபா அனந்த் மகராஜை கேட்டுத் தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அனுஷ்கா ஷர்மா, விராட் கோலிக்கு பெண் குழந்தை பிறந்தது! வெளியான போட்டோ!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR