நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். 


அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தார்.


ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில்; "டி 2758 - என் அன்பார்ந்த நண்பர், என் சக பணியாளரும், மனத்தாழ்மையும் உள்ள மனிதர் ரஜினிகாந்த். அவர் அரசியலில் நுழைவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார். அவரது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!" என்று பதிவு செய்திருக்கிறார்.