கொமோடோ டிராகன் அல்லது கொமோடோ உடும்பு என்பது இந்தோனேசிய நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய தீவுகளில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம். வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்கும் இது உலகின் மிகப்பெரிய பல்லி வகை. அரிதான சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 3 மீட்டர் (10 அடி) வளர்ந்து, சுமார் 70 கிலோகிராம் (150 பவுண்டு) எடையுடன் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இவ்வளவு கவர்ச்சியா? பெண்ணின் நடத்துக்கு ரியாக்ட் செய்யாத ஆண்: வீடியோ வைரல்


கொமோடோ டிராகன்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றைப் பதுங்கியிருந்து வேட்டையாடுகின்றன. பெரிய கோமோடோ டிராகன்களின் முக்கியமான உணவு டிமோர் என்ற ஒருவகை மான் ஆகும். ஆனால் அவை கணிசமான அளவு விலங்குகளின் பிணங்களையே சாப்பிடுகின்றன. அவை சில சமயங்களில் மனிதர்களையும் தாக்குவது உண்டு.



மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உறவு கொள்ளும் கொமடோ டிராகன்கள் செப்டம்பர் மாதம் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை அடைத்து வைக்கின்றன, ஏப்ரல் மாதத்தில் பூச்சிகள் அதிக அளவில் அதிக அளவில் இருக்கும் போது அவை பொரிக்கின்றன. இளம் கொமோடோ டிராகன்கள் வலுவற்றதாக இருப்பதால் மரங்களில் ஏறி வேட்டையாடுபவர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பாக உள்ளன. அவை 8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகின்றன. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள் ஆகும்.


இத்தகைய கொமோடோ டிராகன் கடற்கரை ஒன்றில் ஆமை ஒன்றை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆமையை உணவுக்காக பிடித்துக் கொண்டு வருவதை ஒருவர் அழகாக வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளர். பலர் கொமோடா டிராகனை முதன்முறையாக பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | குழந்தையாய் மாறி ஊஞ்சல் விளையாடிய யானை! வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ