பைக்கில் மோதி தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன்! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
Viral Video 7 Year Old Boy In Mangaluru Caught In Accident : ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சியில், 7 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video 7 Year Old Boy In Mangaluru Caught In Accident : கர்நாடகாவில் இருக்கும் மங்கலூருவில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாய்கிழமை அன்று, மங்கலூருக்கு அருகில் இருக்கும் பலியூர் சாலையில், ஒரு சிறுவன் சாலையை கடக்க வேகமாக ஓடிய போது, வேகமாக வந்த பைக்கில் மோதி தூக்கி வீசப்பட்டான். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
வைரல் வீடியோ:
வைரலாகி வரும் அந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு கேட்டை திறந்துக்கொண்டு பல, வெள்ளை சட்டை வெள்ளை தொப்பி அணிந்த பல சிறுவர்கள், ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.