சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!
Funny Viral Video : வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண் தனது சைக்கிளில் லிஃப்ட் கேட்ட நபருக்கு செய்த செயல் வைரலாகி வருகிறது.
Funny Viral Video : தினந்தோறும், ஏதேனும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் அந்த வீடியோக்களால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பது நமக்கும் தெரியும், வீடியோவை ஷேர் செய்பவர்களுக்கும் தெரியும். இவை, பல கடினமான சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கும் வீடியோக்களாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ குறித்து இங்கு பார்ப்போம்.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு ஆள், காலில் ஸ்கேட்டிங் ஷூவை மாட்டிக்கொண்டு, ரோட்டில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே இருக்கிறார். அப்படி போய்க்கொண்டே, சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பார்த்த பின்னர் அந்த சைக்கிளின் சீட்டில் அமர்ந்து கொள்கிறார்.
யாரோ தன் சைக்கிளில் அமர்ந்ததை உணர்ந்த அந்த பெண், பின்னர், சுதாரித்துக்கொண்டு ஸ்டடியாக ஓட்டுகிறார். அதன் பிறகுதான் காமெடியே. அந்த பெண், அப்படியே ரோட்டை தாண்டி, குளத்தில் விட்டுவிடுகிறார். தான் விழுந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் இருப்பவனும் சேர்ந்து விழ வேண்டும் என இந்த பெண் செய்த செயல் இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது.
நெட்டிசன்கள் கருத்து:
இந்த வீடியோவை பார்த்தவர்கள், அந்த பையனுக்கு சரியான பாடத்தை, இப்பெண் கற்பித்து விட்டதாக கூறியிருக்கின்றனர். அது மட்டுமன்றி, தனக்கு ஷாக் கொடுத்தவனுக்கு திரும்ப ஷாக் கொடுத்த பெண்ணை, பலர் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | “இந்தியில் பேசுங்க” வேறு மொழி பேசியவரை அதட்டிய பெண்-மெட்ரோவில் வெடித்த சண்டை!
மேலும் படிக்க | ரயிலை பிடிக்க ஓடலாம்..ரயில் மேலையே ஓடலாமா? சிறுமி செய்த அட்டகாசம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ