Hyderabad Youngster Chasing Dog And Dies Viral Video : இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள், பல நேரங்களில் நம் இதயத்தையே கணக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நண்பனின் பிறந்தநாள் கொண்டாட சென்ற அந்த இளைஞர், எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தது எப்படி? இதொ அது குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர் உயிரிழப்பு:


ஐதராபாத்தில் இருக்கும் சந்தன் நகரில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரை விட்டிருக்கிறார் உதய் குமார். 22 வயது இளைஞரான இவர், பெயிண்டர் வேலை செய்து வருகிறார். ஜோதி நகரை சேர்ந்த இவர், சம்பவம் நடந்த தினமான அக்டோபர் 20-21ஆம் தேதி இரவு நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விவி ப்ரைட் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். 


வைரல் வீடியோ:


இளைஞரின் உயிரிழப்புக்கு பிறகு, அவர் அந்த ஹோட்டலின் 3வது மாடியில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. முதலில், ஹோட்டல் லாபியில் ஒரு நாய் இருக்கிறது. இதை பார்த்த பின்பு அதன் பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடும் அவர் வேகமாக ஓடியதால் நிற்க முடியாமல் நிலை தடுமாறி ஹோட்டலின் ஜன்னல் வழியாக கீழே விழுந்துவிடுகிறார்.