Viral Video Of Actor NT Ramaswamy : தெலுங்கில், பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வர்ஜ்பவர் என்.டி.ராமஸ்வாமி. இவர் நடித்திருக்கும் லவ் ரெட்டி திரைப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் என்.டி.ராமஸ்வாமி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் தியேட்டர் விசிட் சமீபத்த்லி நடைப்பெற்றது. ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் விசிட்டிற்கு சென்ற இவர்கள், அங்கிருக்கும் ரசிகர்களுடன் கலந்துரையாடும் நோக்கில் சென்றனர். அங்குதான் படக்குழுவினர் எதிர்பாராத சம்பவம் நடைப்பெற்றிருக்கிறாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


லவ் ரெட்டி திரைப்படம் முடிந்த பிறகு, அங்கிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக படக்குழுவினர் மேடை மீது ஏறி நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்மணி, அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த என்.டி.ராமஸ்வாமியை சட்டையை பிடித்து பளார் பளார் என கண்ணத்தில் அறைந்தார். சுற்றி இருப்பவர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர் மீண்டும் மீண்டும் அவரை தாக்குவதற்காக வந்தார். அப்படி வருகையில், “அந்த காதல் ஜோடியை ஏன் அப்படி சித்ரவதை செய்தாய்?” என மீண்டும் மீண்டும் கேட்டு அடித்தாராம்.