Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் பல வித பாம்புகளின் (Snake) வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது. நிஜ வாழ்க்கையில் நாம் கண்ணால் காண முடியாத பல விஷயங்களை இங்கே மிக எளிதாக கண்டு விடலாம். இப்படி நாம் காணும் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பைக்கில் நடுரோட்டில் காதலன் செய்த காரியம்: தீயாய் பரவும் வைரல் வீடியோ


அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில் பாம்பிற்குதான் முக்கிய கதாபாத்திரம். இந்த வீடியோவில் நாம் காணும் பாம்பு நம்மை அதிசயிக்க வைப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். சில வினாடிகளே உள்ள இந்த வீடியோ மிக வேகமாக வைரல் (Viral Video) ஆகி வருகின்றது. இதில் ஒரு சிறிய பாம்பு ஒருவர் கிச்சு கிச்சு மூட்டியதுடன் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இந்த காட்சியை வீடியோவில் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.



இந்த வீடியோ யூடியூப்பில் Keep On Planting என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இணைய வாசிகளின் ஆதரவு வெகுவாக கிடைத்து வருகிறது. பலர் தங்கள் வேடிக்கையான கமெண்டுகளை அளித்து வருகின்றனார். ஒரு பயனர் தனது கமெண்டில், “ என்ன ஒரு அழகான பாம்பு!!” என வியந்துள்ளார்.மற்றொரு பயனர், “ஆச்சரியம்!! இது எந்த பாம்பு, இது விஷப்பாம்பா?” என கேட்டுள்ளார்.


மேலும் படிக்க | Viral Video: அதிசய பறவைக்கு இயற்கை தந்த நெக்லஸ்.. உங்களை வியப்பில் ஆழ்ந்தும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ