பைக்கில் நடுரோட்டில் காதலன் செய்த காரியம்: தீயாய் பரவும் வைரல் வீடியோ

இந்த வீடியோவில் பெண் ஒருவரை புல்லட் பைக்கின் டேங்க் மீது அமர வைத்து, இளைஞர் ஒருவர் பைக்கினை அதிவேகமாக இயக்கியுள்ளார். அதன்படி நடுரோட்டில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2023, 03:57 PM IST
  • புல்லட்டில் காதல் ஜோடியின் ஸ்டண்ட்.
  • காதல் ஜோடி பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ.
  • வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பைக்கில் நடுரோட்டில் காதலன் செய்த காரியம்: தீயாய் பரவும் வைரல் வீடியோ title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ காதல் ஜோடி தொடர்புடையது போல் தெரிகிறது. இதில் நடப்பதைப் பார்த்து நீங்கள் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் பொது இடத்தில் காதலிக்கிறோம் என அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு பரபர வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 

 மேலும் படிக்க | இந்த பாம்புக்கு சொகுச பாத்திங்களா.. பார் மேனஜர் அலறல்: வீடியோ வைரல்

இந்த நிலையில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இந்த சமபவம் நடந்துள்ளது. இதில் ஆண் ஒருவர் தனது காதலியை புல்லட் டேங்கின் மீது அமர வைத்திருப்பதை நாம் காணலாம். இதன் போது அவர் சாலையில் முழு வேகத்தில் புல்லட்டை ஓட்டுவதையும் காணலாம். இதைப் பார்த்து பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடியின் வீடியோவை இங்கே காணுங்கள்:

புல்லட்டில் காதல் ஜோடி
இந்த வைரலான வீடியோவை மம்தா திரிபாதி என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதில் லக்னோவின் அலிகஞ்ச் அருகே உள்ள நிராலா நகர் பாலத்தில் புல்லட் ஓட்டி வந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர், அத்துடன் இந்த ஜோடி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: காணக் கிடைக்காத அதிசய காட்சி.. கூடு கட்டும் குருவி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News