Online hearing-ல் ஷர்ட் இல்லாமல் திரையில் தோன்றிய lawyer: கண்டித்த SC நீதிபதிகள்
வீடியோ கான்ஃபெரென்சிங்கில் ஒரு வழக்கறிஞர் சட்டை அணியாமல் ஆஜரானதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோவம் கொண்டனர்.
புதுடில்லி: கொரோனா காலத்தில் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஒழுங்காக ஆடை அணிந்து அலுவலகம் செல்ல தயாராகும் பழக்கம் பழைய பழக்கமாகிவிட்டது. முக்கியமான ஜூம் அழைப்புகளில் கூட, பலர் ஃபார்மலான ஆடைகளுக்கு பதிலாக வசதியான சாதாரண ஆடைகளையே உடுத்துகிறார்கள்.
இருப்பினும், அனைத்துக்கும் ஒரு வரம்பு உள்ளது. எதுவும் எல்லை மீறினால் ஆபத்துதான். அப்படி இந்த விஷயத்தில் ஒருவர் எல்லை மீறி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கோவத்திற்கு ஆளானார்.
செவ்வாயன்று, வீடியோ கான்ஃபெரென்சிங்கில் (Video Conferencing) ஒரு வழக்கறிஞர் சட்டை அணியாமல் ஆஜரானதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோவம் கொண்டனர். சட்டை அணியாத வழக்கறிஞர் கேமராவை சரிசெய்வதைக் கண்டு கோவமும் வருத்தமும் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இவ்வளவு பொறுப்பற்றவர்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.
“இது எப்படிப்பட்ட நடத்தை? ஏழு எட்டு மாத வீடியோ கான்பரன்சிங் விசாரணைகளுக்குப் பிறகும், இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று எல் நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற மெய்நிகர் நீதிமன்ற அறையில் நடந்தது. தொற்றுநோய்களின் (Pandemic) போது குழந்தை பராமரிப்பு இல்லங்களின் நிலை குறித்த ஒரு சூ மோட்டோ மனுவின் விசாரணையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இது முதல் சம்பவம் அல்ல
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. அக்டோபர் 26 அன்று, நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஒரு பெஞ்ச் முன்பு ஒரு வழக்கறிஞர் திரையில் காணப்பட்டபோதும், அவர் சட்டை அணியாமல் இருந்தார்.
ALSO READ: Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில்..!
"நான் யார் மீதும் கடினமான அணுகுமுறையைக் காட்ட விரும்பவில்லை. ஆனால், நீங்கள் வீடியோ திரையில் காணப்படுகிறீர்கள். கவனமாக இருக்க வேண்டும்” என்று நீதிபதி சந்திரசூட் அப்போது கூறியிருந்தார்.
ஜூன் மாதத்தில், ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மெய்நிகர் விசாரணை அமர்வில், டி-ஷர்ட் அணிந்துகொண்டு, படுக்கையில் படுத்த வண்ணம் கலந்துகொண்டார். இதற்கு நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறைந்தபட்ச நீதிமன்ற ஒழுக்கங்களாவது பின்பற்றப்பட வெண்டும் அன்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு வழக்கறிஞரின் இதே போன்ற செயல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் கோபத்தை அதிகமாக்கியது. அந்த வழக்கறிஞர் ஆன்லைன் வழக்கு விசாரணை முழழுவதிலும் பனியன் அணிந்து சட்டை அணியாமல் பங்கெடுத்தார்.
ALSO READ: யோகா செய்யும் அனுஷ்கா, ஆதரவாய் அருகில் விராட்: viral ஆகி இதயங்களைக் கவர்ந்த pic!!
வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் (Lawyers) ஒழுங்கான முறையில் உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத பொருத்தமற்ற படங்களை காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது. COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் அதன் செயல்பாட்டை தடைசெய்த உச்ச நீதிமன்றம், தற்போது வீடியோ-கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR