பெங்களூருவின் மோசமான சாலையினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வளர் குழு ஒன்று பரதநாட்டியத்தை ஆயுதமாக கையில் எடுத்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களுருவில் மோசமான சாலை காரனமாக, சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. இந்த விவகாரத்தில் அரசின் தலையீடல் வேண்டும் என பொதுமக்கள் பலரும் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வளர் குழு மோசமான சாலையினால் மக்கள் அனுபவிக்கும் அவதி குறித்து வேடிக்கையாக தெரிவித்துள்ளனர்.


மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் சாலைகள் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது., இந்த சாலையினை கடக்க வேண்டுமெனில் சாலையில் பரதநாட்டியம் ஆட வேண்டியுள்ளது என வேடிக்கையாக உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர் இந்த Malleshwaram Social குழுவினர்.


பெங்களரு நகரின் சாலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ ஆரம்பதில் உறுவாக்கப்பட்டது, ஆனால் தற்போது இந்த வீடியோ அனைத்து மாநிலங்களில் உள்ள சாலையினை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி வருகின்றது. இந்த வீடியோவானது ஆரம்பம் தான் எனவும், மேலும் இதுப்போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்க இந்த குழு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!