Leopard Video: முதலையை அட்டாக் செய்த சிறுத்தை - திடீரென வந்த காட்டெருமை கூட்டம்: அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?
Wildlife Viral Video: வனப்பகுதியில் ஆக்ரோஷமாக முதலையை சிறுத்தை ஒன்று அட்டாக் செய்து கொண்டிருக்கும்போது திடீரென காட்டெருமை கூட்டம் வந்தது. அப்புறம் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.
முதலை சிறுத்தையை வேட்டையாடுவதும், சிறுத்தை முதலையை வேட்டையாடுவதும் எப்பொழுதாவது அரிதாக நடக்கக்கூடிய விஷயம். இரண்டும் அதனதன் ராஜாங்கத்தில் ராஜாக்கள் என்றே சொல்லலாம். நிலத்தில் சிறுத்தை ராஜாங்கம் நடத்துகிறது என்றால், தண்ணீரில் முதலை தான் ராஜாங்கம். சிறுத்தைக்கு நீச்சல் தெரியும் என்றாலும், முதலையிடம் எல்லாம் அதனால் நீரில் சமாளிக்கவே முடியாது. நீருக்குள் சென்றுவிட்டால் முதலையின் கருணை பார்வையில் தப்பித்தால் மட்டுமே வழி. மற்றபடியெல்லாம் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் எல்லாம் தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதே ஃபார்முலா முதலைக்கும் பொருந்தும். நிலத்தில் வந்துவிட்டால் சிறுத்தையின் கருணை பார்வை கிடைத்தால் மட்டுமே தப்பிக்கலாம், மற்றபடி அது தப்பிப்பது என்பதெல்லாம் வழியில்லாத பாதை போன்றதுதான்.
மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவியை ப்ரபோஸ் செய்ய மாணவன்..அப்புறம் என்னாச்சி..வீடியோ வைரல்
அப்படி சிறுத்தையின் வேட்டையில் சிக்கிய முதலையின் வீடியோ தான் இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியிருக்கிறது. கடும் பசியில் இருந்த சிறுத்தையிடம் சிக்கிக் கொண்டது முதலை. இந்த உணவை விட்டுவிடக்கூடாது என்பதில் ஆக்ரோஷமாக இருக்கும் சிறுத்தை, முதலையை வேட்டையாடிவிட்டது. அந்த நேரம் பார்த்து அங்கு காட்டெருமை கூட்டம் ஒன்று திடீரென என்டிரி கொடுக்க, ஏதோ நடக்கப்போகிறது என்பதுபோல் அந்த காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக, அந்த காட்டெருமை கூட்டம் சிறுத்தையை முட்டி முதலையை காப்பாற்றும் என்பதுபோல் வீடியோவை பார்க்கும்போது தோன்றும். ஆனால், வேகமாக வரும் காட்டெருமைகள் தாங்கள் சிறுத்தையிடம் இருந்து தப்பித்தால்போதும் என ஓடிவிடுகின்றன.
இதுதான் அங்கிருக்கும் டிவிஸ்ட். சிறுத்தையை முட்டி காட்டெருமைகள் சண்டைக்கு தயாராக வருவதுபோல தான் வீடியோவை சில நொடிகள் பார்க்கும்போது தோன்றும். கிளைமாக்ஸில் தான் காட்டெருமைகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டால் போதும்டா சாமி என நினைத்துக் கொண்டு ஓடுவது பார்வையாளர்களுக்கு தெரியும். இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காட்டெருமைகள் கூட்டமாக வரும்போது சிறுத்தை துளியும் அசையாமல் கம்பீரமாக இருக்கிறது. Wildlife_stories_ என்ற பக்கத்தில் இருக்கும் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்துள்ளது.
மேலும் படிக்க | கேபிபாரா விழுங்கிய 25 அடி நீள ராட்சத அனகோண்டா: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ