புலி மற்றும் சிறுத்தையின் வேட்டைகள் தொடர்பான வீடியோ பல யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருக்கின்றன. இப்போது லேட்டஸ்டாக அதுபோன்ற இன்னொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. சிறுத்தை ஒன்று கம்பீரமாக காட்டெருமைகளின் கூட்டத்துக்குள் புகுந்து காட்டெருமையின் குட்டியை வேட்டைக்காக தூக்கிச் செலுகிறது. இந்த துணிச்சல் மிக்க வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஏராளமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ஆண்மகன்கள் இப்படி இருக்கணும்! மாதவிடாய் காலத்தில் தாய்க்கு சேவை செய்யும் மகன்


அந்த வீடியோவில் கூட்டமாக காட்டெருமைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது எங்கிருந்தோ ஒரு மூலையில் இருந்து சிறுத்தை ஒன்று வேகமாக ஓடி வருகிறது. காட்டெருமைகள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த குட்டியை தூக்கிவிடுகிறது. உடனடியாக அந்த குட்டியை மீட்பதற்கு காட்டெருமைகள் முயல, சிறுத்தை துளியும் இடம் கொடுக்காமல் வனப்பகுதிக்குள் காட்டெருமை குட்டியை தூக்கிக் கொண்டே ஓடுகிறது. நொடியில் தன்னுடைய இரை எது என தீர்மானித்து துல்லியமான பிளானை அரங்கேற்றியிருக்கிறது சிறுத்தை.



wildlife_stories என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீயோ பகிரப்பட்டிருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டிருக்கும் சிறுத்தையின் வேட்டை வீடியோ  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றிருக்கிறது. பார்வைகளைப் பொறுத்தவரை 30 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளை பெற்று இன்ஸ்டாகிராம் டிரெண்டிங்கிலும் இருக்கிறது. கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், தப்பிக்க துளியும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை சிறுத்தை, காட்டெருமைக்குப் பதிலாக மனிதர்கள் யாராவது இருந்தாலும் தப்பிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | அட கடவுளே..பள்ளி ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ