ட்விட்டரில் வைரலாகும் சில வீடியோக்கள், சில நேரங்களில் நம் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒரு நல்ல- வீடியோ தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IAS அதிகாரி அவனிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பள்ளி சிறுவன் ஒருவர் பிரார்த்தனையின் போது சாக்லேட் மோதிரத்தை பதுக்கி வைத்து சுவைக்கின்றான். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது. 


சுமார் 30 விநாடிகள் ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோ, ஒரு சிறுவன் தனது பள்ளி பிராத்தணையின் போது கண்களை மூடிக்கொண்டு கைகள் இணைந்திருப்பதைக் காட்டுகிறது. முதல் பார்வையில், சிறுவன் முழுமையாக கவனம் செலுத்துகிறான் என்றும், 'இட்னி சக்தி ஹ்யூம் தேனா' என்ற பிரார்த்தனையை பாடுவதில் மூழ்கியிருப்பதாகவும் ஒருவர் நினைக்கலாம். ஆனால், ஒரு நெருக்கமான பார்வையில், அவர் தனது ஆள்காட்டி விரலில் அணிந்திருக்கும் ஒரு சாக்லேட் மோதிரம் இருப்பதையும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைப் பதுங்கிக் சுவைத்துக் கொண்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.



இந்த வீடியோ நம் அணைவரையும் பள்ளி நாட்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது எனலாம். வகுப்புகளின் போது மதிய உணவு சாப்பிட்ட நினைவுகள் அனைத்தும் மீண்டும் இந்த வீடியோ காணுகையில் திரும்பின.


இந்த வீடியோ இன்று இணையத்தில் மிகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. நமது பள்ளி வாழ்க்கையினை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த வீடியோவினை பார்த்து நீங்களும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.