உடல்நிலை சரியில்லா குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஊசி போடுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு குழந்தை உடல்நிலை சரியில்லாத தனது பாம்பிற்கு ஊசி போடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுகுழந்தைகள் பெரும்பாலும் பொம்மைகள் வைத்து விளையாடுதவை நாம் பார்த்திருப்போம், ஆனால் இந்தோனேஷியாவை சேர்ந்த 3-வயது சிறுமி தங்ஞிரான்ங் தனது வளர்ப்பு பாம்பிற்கு பல் தேய்தல், குளிப்பாட்டுதல், மருத்துவம் பார்த்தல் என பாம்பிற்கு சேவகம் செய்து தனது காலத்தை போக்கி வருகின்றார்.


பாம்பு மட்டும் அல்ல, தான் ஒரு முதலையும் வளர்த்து வரும் தங்ஞிரான்ங் அந்த முதலைக்கும் அனைத்து சேவகங்களையும் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது செல்ல பிராணிகளுக்கு சேவகம் செய்யும் விடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பார்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சிறுமியின் இந்த துணிச்சலுக்கு காரணம் அவரது தந்தை தானாம், இயற்கையை போன்று வின விலங்குகளும் இறக்கையை போல் பாவித்து பழக வேண்டும் என சிறுமிக்கு சொல்லி கொடுத்துள்ளார். இதன் காரணமாக குழந்தை பருவத்தில் இருந்து தனது செல்ல பிராணிகளுடன் இன்புற பழகி வருகின்றார்.


சிறுமி தனது பாம்பிற்கு மருத்துவம் பார்க்கும் வீடியோ உங்கள் பார்வைக்கு...