லாஸ்லியா தந்தை மரணம் குறித்து கனடா அரசு வெளியிட்ட தகவல் இதுதான்!
இந்த மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கனடா அரசு வழங்கியுள்ளது.
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மரியநேசனின் தந்தை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி னடாவில் காலமானார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
இதற்கிடையில் லாஸ்லியாவின் தந்தை படுக்கை அறையில் இறந்து கிடக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. முதல் நாள் இரவு தன்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதன்பின்னரே அவர் படுக்கைக்கு சென்றதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் கூறுவதும் அந்த வீடியோவில் உள்ளது.
ALSO READ | இறந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை: இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்நிலையில் இந்த மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கனடா அரசு வழங்கியுள்ளது. அதில் மரியநேசனின் மரணம் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. லாஸ்லியாவின் (Losliya Mariyanesan) தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் தற்போது கனடா அரசின் பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கனடாவில் காலமான மரியநேசனின் உடல் இன்னும் ஓரிரு வாரத்தில் இலங்கைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யபடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மரியநேசனின் மரணம் குறித்து எந்தவிதமான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருடைய மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ALSO READ | பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார் ...!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR