பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மரியநேசனின் தந்தை நேற்று இரவு கனடாவில் காலமானார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. '
இந்த நிலையில் சென்னையில் இருக்கும் லாஸ்லியா மரியநேசன் (Losliya Mariyanesan) இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. லாஸ்லியாவின் தந்தை படுக்கை அறையில் இறந்து கிடக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ALSO READ | பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார் ...!
முதல் நாள் இரவு தன்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதன்பின்னரே அவர் படுக்கைக்கு சென்றதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் கூறுவதும் அந்த வீடியோவில் உள்ளது.
இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியா மரியநேசனின் தந்தை மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் லாஸ்லியாவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக லாஸ்லியாவுக்கு விரைவில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.
ALSO READ | பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR