வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இங்கு ஒரு காதலன் மற்றும் காதலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாக காதலில் சண்டை சச்சரவுகள் சகஜம். ஆனால் சண்டையை சமாளிக்க காதலர்கள் ரோஜா மலர்களையும் பரிசுகளையும் கொடுத்து காதலியின் இதயத்தை குளிர்விக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தற்போது இங்கு காதலியை சமாதானம் படுத்த காதலன் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காதலன் தனது கோபமான காதலியை சமாதானப்படுத்த தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதைக் காணலாம். மேலும் அந்த பெண்ணின் காலில் விழுந்து கொஞ்சுவதையும் காணலாம். சில நொடிகளில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


அந்த பையன் பெண்ணின் காலில் விழுந்து கதறினாலும் அவர் உருகவில்லை. பையனும் பெண்ணின் காலை பிடித்து தடுக்க முயன்றான், இருப்பினும் ஒரு பயனும் இல்லை. இதற்கிடையில், மற்றொரு நபரையும் இந்த வீடியோவில் காணலாம். அந்த மற்றொரு நபர் வந்தவுடன் சிறுவன் இடத்தைக் காலி செய்கிறான். பெண்ணும் அங்கிருந்து நகர்கிறாள்.


காலில் விழுந்து கெஞ்சும் காதலனின் வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @funtaap என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. மேலும் தற்போது வரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. மேலும்  இந்த காட்சியை அங்கு இருந்த யாரோ ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.