சரக்கடித்த சேவல், கம்பனி கொடுத்த கோழி: வைரல் வீடியோ

Funny Viral Video: சரக்கடித்தால் சேவலும் உயரமாக பறக்குமா? பீர் அடித்துவிட்டு கோழியும் சேவலும் செய்யும் சேட்டையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 03:25 PM IST
  • மனிதர்கள் பீர் அடித்தால் நிலை தடுமாறுவார்கள்.
  • சேவலும் கோழியும் பீர் அடித்தால் என்ன ஆகும்?
  • இந்த வீடியோவில் தெளிவாகக் காணலாம்.
சரக்கடித்த சேவல், கம்பனி கொடுத்த கோழி: வைரல் வீடியோ title=

கோழி சேவல் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகில் பல வகையான வீடியோக்கள் வெளிவருகின்றன. இந்த வீடியோக்களில் பலவற்றை மக்கள் மிகவும் விரும்பினாலும், பார்த்த உடனேயே மனதில் இடம்பெறும் சில வித்தியாசமான வீடியோக்களும் அவ்வப்போது வருகின்றன. இப்போது அதே போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சேவல் மது அருந்திவிட்டு நிலை தடுமாறி ஆடத் தொடங்குவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் ஒரு பீர் கிளாஸ் இருப்பதை காண முடிகின்றது. சேவல் ஒன்று அதைச் சுவைக்கச் செல்கிறது. அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த வீடியோ உள்ளது. 

பீர் குடித்த சேவல் 

இந்த வீடியோவில் பீர் பாட்டில் வைக்கப்பட்டுள்ளதையும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிளாசில் பீர் நிரப்பப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து ஒரு சேவலும் கோழியும் அங்கு வருகின்றன. அவை மெதுவாக பீர் கிளாசை நெருங்கி, பின்னர் அதை சுவைக்கத் தொடங்குகின்றன. பீர் குடித்துவிட்டு, சேவல் காற்றில் உயரமாக பறக்கத் தொடங்குகிறது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் பொதுவாக சேவல் இவ்வளவு உயரத்தில் பறப்பதை பார்க்க முடியாது. 

மேலும் படிக்க | மனைவியை எழுப்பிய கணவனுக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ

சரக்கடித்த சேவலின் வீடியோவை இங்கே காணலாம்:

 

காட்சியை பார்த்து ஆச்சரியப்பட்ட மக்கள்

பீர் குடித்துவிட்டு கோழிக்கும் சேவலுக்கும் நேர்ந்ததை கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது 18plusguyy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளவாசிகள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். பலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் வாயில்லா ஜீவன்களுக்கு பீர் கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்கள் கிடைத்துள்ளன.

சேவல் பறப்பது போல இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கும் காட்சி செயற்கையாக இருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்கு இப்படிப்பட்ட பழக்கங்களை அறிமுகம் செய்வது அவற்றுக்கு கேடு விளைவிக்கக்கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

மேலும் படிக்க | குதிரை மீது சொகுசாக சவாரி போகும் நாய் குட்டி; இணையத்தை கலக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News