RJ பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டப்பாவ கிழிச்சான் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலமாக தனது ட்விட்டர் வாயிலாகவும், நேரடியாகவும் சமூக பிரச்சணைகள் குறித்து குரல் கொடுத்து வருபவர் RJ  பாலாஜி. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் அரசியல் தலைவரை போல் RJ பாலாஜி காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


இந்த பரபரப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக "தான் அரசியல்வாதியாக நடிப்பதாகவும், இத்திரைப்படத்திற்கு  LKG என பெயரிடப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் சர்சையான கருத்துகளுக்கு பெயர் போன நாஞ்சில் சம்பத் அவர்கள் RJ பாலாஜிக்கு தந்தையாக நடிப்பதாகவும், நடிகை பிரியா ஆனந்த முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று டப்பாவ கிழிச்சான் என்னும் பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



முன்னதாக இப்படம் பொங்கள் தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய திரையரங்கு கிடைக்காததால் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்றைய தினம் twitter நிறுவனத்தில் இந்திய தலைமையகத்தில் இருந்து படத்தின் அறிவிப்பு தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வின்போது படக்குழுவினருடன் நேயர்கள் நேரலை கலந்துரையாடல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.