புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் நடிகையர் திலகம். ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சாவித்திரி 60-ம் மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 


அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். மேலும் ‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா, நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக வேடத்தில் நடிக்கிறார். 


ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர்சல்மான்னின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், நிருபர் வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தாவின் ஃபஸ்ட் லுக், விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத் தோற்றத்தின் புகைப்படம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது.


 



 



 



 


இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி) வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.