இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான தொடரில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் மகேந்திர சிங் தோனி., தனது ஓய்வு நேரத்தினை சற்று வித்தியாசமாக செலவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது தன் மகளுடன் வீட்டில் நேரத்தை கழித்து வருகின்றார். இந்நிலையில் தனது மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவினை படம்பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்தி வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது...



ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சி நகரில் பிறந்த மகேந்திர சிங் டோனி 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினார். அணியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தன் தனிப்பட்ட ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி சரிவை நோக்கிச் செல்லும்போது இறுதியில் களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றதில் டோனிக்கு பெரும் பங்கு உண்டு. 


விளையாட்டிற்கு மட்டும் அல்ல தன் குடும்பத்திற்கு இணையான முக்கியதுவத்தினை அளிப்பவர் டோனி. விளையாட்டின் போது பயிற்சி, போட்டிகள் என பிஸியாக இருக்கும் இவர், ஓய்வின் போது குடும்பம், குழந்தை, வீடு என பிஸியாக மாறிவிடுகின்றார். சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்கும் டோனி, தன் குடும்ப நிகழ்ச்சிகளை குறித்தும் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது தனது மகளின் ஸ்டன்ட் வீடியாவினை பகிர்ந்துள்ளார்.