வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் பொதுவாக தங்கள் கூட்டத்துடம் சேர்ந்து வாழும் சமூக உயிரினங்கள். குரங்கு குட்டிகளும் மனித குழந்தைகள் போன்றவைதான். இவற்றை தாயிடம் இருந்து பிரித்தால், இவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. தாய் குரங்குகளும் தங்கள் குட்டிகளை மிகவும் கவனமாக பாதுகாக்கின்றன. குட்டிகளை தாய் குரங்குகள் தங்கள் பிடியில் இருந்து விடுவதே இல்லை. அவற்றுக்கு தேவையான அனைத்து திறன்களையும் கற்றுக்கொடுக்கின்றன. தற்போது சமூக ஊடகங்களில் குரங்குகளின் மிக அருமையான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


 வீடியோவில், ஒரு தாய் குரங்கு தனது குட்டி சாப்பிட, வாழைப்பழத்தை உரித்து கொடுப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘monkeyadore’ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவுக்கு 268k வியூஸ்களும் சுமார் 8,300 லைக்குகளும் கிடைத்துள்ளன. வீடியோவில், குட்டி குரங்கு வாழைப்பழத்தை சாப்பிட, அதை தனது தாயிந் கையிலிருந்து பிடுங்குவதை காண முடிகின்றது. ஆனால், குட்டிக்கு அதை அளிப்பதற்கு முன்னர், தாய் குரங்கு அதை உரித்து பின் பழத்தை குட்டிக்கு கொடுக்கிறது. இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.


மேலும் படிகக் | புலியை ஏமாற்றி விழ வைத்த கில்லாடி குரங்கு: வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள் 


தாய் குரங்கு தோலை உரிக்கும்போது, குட்டியின் தலையில் தோலின் சில பகுதிகள் விழுகின்றன. அதைப் பார்த்த தாய் குரங்கு அழகாக அதை எடுத்து போடுகிறது. தாய் மற்றும் குட்டி குரங்கு இரண்டும், வாழைப்பழத்தைப் பகிர்ந்து கொள்ள மரத்தின் கிளை மீது அமர்ந்துள்ளன. குட்டி குரங்கை தாய் பாசமாக பார்த்துக்கொள்வதைப் பார்த்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். 


இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். "மிகவும் எளிமையான விஷயங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். "பாசமான அம்மா குரங்கு" என ஒருவர் பாராட்டியுள்ளார். "அந்த குரங்கு இவ்வளவு நேர்த்தியாக தோலை உரிப்பது பார்க்க அதிசயமாக உள்ளது" என்று மற்றொரு பயனர் வியந்துள்ளார். 


அம்மா குரங்கின் பாசத்தை காட்டு வீடியோவை இங்கே காணலாம்: 



மேலும் படிக்க | 'ஷ்ஷ்...சைலண்டா எடுத்துட்டு ஓடிடுவோம்’: கில்லாடி குரங்கு செய்த தில்லாலங்கடி வேலை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ