மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிகோரி டா சில்வா (Gregory Da Silva)  என்பவர் 735 முட்டைகள் அடங்கிய தொப்பியை தலையில் சுமந்து நடந்த காட்சி பார்க்க வியப்பாக இருக்கிறது. இது வெறும் வைரல் வீடியோ மட்டுமல்ல, உலக சாதனையாகவும் பதிவாகியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படைப்பாற்றல் சோதனைகளும் கின்னஸ் உலக சாதனையில் முக்கிய இட்த்தைப் பிடிக்கின்றன. அதற்காகவே பல்வேறு புதிய யோசனைகளை அரங்கேற்றுகிறார்கள். அவை யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவில் இருக்கின்றன.  


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் இதுபோன்ற ஒரு விசித்திரமான ஆனால் போற்றத்தக்க சாதனை உருவாக்கப்பட்டது.கிரிகோரி டா சில்வா (Gregory Da Silva) என்பவர் இந்த சாதனையை செய்தார். அவர், 'எக்மேன்' என்று அழைக்கப்படுகிறார்.


கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எக்மேன் கிரிகோரி டா சில்வா, ஒரு தொப்பியில் அதிக முட்டைகளை எடுத்துச் சென்று உலக சாதனை படைத்தார்!



இந்த வீடியோவைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது? தமிழக ஊரகப் பகுதிகளில் கரகம் சுமந்து நடனம் ஆடுவார்களே, அதுதான் இவர்களுக்கு உதாரணமாக இருந்ததோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.


Read Also | Guinness Records: 1360 கிமீ பயணத்தை ஒரே பயணத்தில் முடித்த டொயோட்டா Mirai


ஒரு தொப்பியில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளத்தில் 735 முட்டைகள் அடுக்கப்பட்டிதிருந்தது. அந்த நீண்ட  தொப்பியை தலையில் சுமந்து, பேலன்ஸ் செய்து நடந்து அசாதாரண முட்டை சாதனையை செய்தார் .


வைரலாகி வரும் வீடியோவைப் பகிர்ந்து,  கின்னஸ் உலக சாதனை இன்ஸ்டாகிராம் பதிவில், "மிகவும் அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் ஒரே தொப்பியில் கொண்டு வந்தார் கிரிகோரி டா சில்வா, மொத்த முட்டைகளின் எண்ணிக்கை 735" என்று குறிப்பிட்டுள்ளது.


"மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டைச் சேர்ந்த கிரிகோரி, சீனாவில் சிசிடிவிக்கான GWR சிறப்பு நிகழ்ச்சியில் இந்த அற்புதமான சாதனையை பதிவு செய்தார். தொப்பியில் முட்டைகளை சரியாக அடுக்குவதற்கு மூன்று நாட்கள் ஆனது" என்று கின்னஸ் சாதனையின் சமூக ஊடகப் பதிவு கூறுகிறது.


Also Read | 7 அடி 0.7 அங்குல உயரம்! உலகிலேயே உயரமான பெண்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR