அணில் துரத்தியதற்கு போலீஸில் புகார் கொடுத்த இளைஞர்!
அணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறையினர்!
அணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறையினர்!
ஜெர்மனியில் கார்ல்ஷுரேவில் அணில் ஒன்று தன்னை துரத்துவதாகவும், தன்னை விரைந்து காப்பாற்றும் படி காவல் துறை அவசர தொலைபேசிக்கு அழைப்பு வைத்துள்ளது. இதையடுத்து, அவரின் பேச்சில் இருந்த பதட்டத்தை உணர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உண்மையிலேயே இளைஞர் ஒருவரை அணில் குட்டி துரத்துவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அணிலை தடுக்க முயன்றும் காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பின்னர் அந்த அணில் குட்டி, சோர்வடைந்து அந்த மனிதனை துரத்துவதை நிறுத்தியது.
பின்னர் திடீரென அந்த அணில் குட்டி அயர்ந்து தூங்க தொடங்கியது. காவல்துறையினர் அதனை பாதுகாப்பாக பிடித்து, விலங்குகள் மீட்பு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர்.
நன்மையை கொண்டு வருகின்ற புதிய அடையாளமாகியுள்ள இந்த அணிலுக்கு, 'கார்ல்-ப்ரீட்ரிச்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்த சம்பவம் பற்றி அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விலங்குகள் மீட்பு மையத்தில் அந்த அணில் குட்டி நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கோபமாக இருக்கின்ற அணில்களிடம் இருந்து தங்களை காத்துகொள்ள வேண்டும் என்று புரோஸ்பெக்ட் பூங்கா பார்வையாளர்களை நியூ யார்க் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் வழக்கத்திற்கு மாறாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒரு வாரத்தில் 5 பேரை இந்த அணில்கள் தாக்கியிருந்தன.
கடந்த ஆண்டு பிரிட்டனின் கோர்ன்வாலில் ஆறு அணில்களால் கடிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்று உடல் முழுவதும் ரத்தத்தோடு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.
கடந்த, வியாழக்கிழமை (ஆகஸ்ட்-9) நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவரின் பல புகைப்படங்களோடு, கார்ல்ஸ்ரூ காவல்துறை ட்விட்டர் செய்தி பதிவிட்டுள்ளது. அணில் துரத்துவதுகெல்லாம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இது கேலிக்கு உரிய விஷயமில்லை என்று ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுவாக அணில்கள் தனித்து வாழும் நிலையில் அவை இவ்வாறு மூர்க்கமாக நடந்துகொல்லம் என்றும் உணவு அல்லது உதவி தேவைப்படும்போது அணில்கள் மனிதரை துரத்தும் என்றும் கூறப்படுகிறது.