பாம்பைப் பிடித்து லுங்கிக்குள் போட்ட நபர்; வீடியோவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும். ஒரு நபர் நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற விதத்தை வீடியோ காட்டுகிறது.
வைரல் வீடியோ: ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும். ஒரு நபர் நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற விதத்தை வீடியோ காட்டுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இந்த நடவடிக்கை ஒரு நபரின் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஒரு நபர் பாம்பைப் பிடிக்க முயற்சிப்பதை இந்த வீடியோவில் காணலாம்.
ஒரு நபர் பாம்பை ஒரு குச்சியால் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். பாம்பு தொடர்ந்து படம் எடுத்து அவரை கொட்ட வருகிறது. ஆனால் அந்த நபர் பயமே இல்லாமல், பாம்பை பிடிக்கும் முயர்ச்சியில் உள்ளார். இதைக் கண்டு மக்கள் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். பாம்பை கையாள்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அந்த நபர் ஒரு நொடியில் பாம்பை கட்டுப்படுத்தி தனது லுங்கி மடிப்பில் போட்டுக்கொண்டு செல்கிறார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ-வாக பதிவு செய்தனர். இருப்பினும், இது போன்று பாம்புகளை பிடிக்க முயற்சிக்க வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது.
ALSO READ | பிரபல பிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வீடியோ வைரல்!
இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது சமூக ஊடக பக்கமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சுமார் 1 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். சிலர் கருத்து தெரிவித்தனர் மற்றும் சிலர் அந்த நபரை பாராட்டியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR