தூக்கு படுக்கை இல்லாமல் மருத்துவமனை ஊழியர்களால் பெட்ஷீட்டில் எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை இழுத்து சென்ற அவலம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவரை தூக்கு படுக்கை இல்லாமல் பெட்ஷீட்டில் எக்ஸ்ரே அறைக்கு ஒரு உதவியாளரால் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார். 


இந்த சம்பவம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் (NSCBMC) நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை செய்தி நிறுவனமான ANI, அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  அந்த வீடியோவில், நடக்க முடியாத நிலையில் இருந்த அந்த நோயாளியை தூக்கு படுக்கையில் வைத்து அழைத்துச் செல்லாமல் பெட்ஷீட்டில் படுக்கவைத்து தரதரவென மருத்துவமனை ஊழியர் ஒருவர் இழுத்துச் செல்வதைக் காணலாம். வீடியோவில் பலரும் தரையில் கிடப்பதைக் காணலாம். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



இந்த சம்பவத்திற்கு பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக NSCBMC டீன் திரு நவ்னீத் சக்சேனா தெரிவித்தார், மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.