ஆள் வைத்து அடிக்கும் சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கலாம்! ஆனால், தன்னை அடிக்க சம்பளம் கொடுத்து நியமிக்கும் ஆளைப் பற்றித் தெரியுமா? இது உண்மையான சம்பவம். வேலையில் இருக்கும்போது கவனம் சிதறி விடக்கூடாது என்பதற்காக, தன்னையே அடிக்க ஆள் வைத்திருக்கும் இந்த நபர், தற்போது இணையத்தில் வைரலாகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான் வேலை செய்யும்போது, அடிக்கடி பேஸ்புக் பக்கம் போய்விடுவது தனது வேலைத்திறனை பாதிப்பதாக நினைத்த நபர், அதைத் தடுக்க என்ன செய்வது என்று சிந்தித்திருக்கிறார். சரி, நம்மால் தான் நம்மை கட்டுப்படுத்த முடியவில்லை, எனவே அதற்காக ஒரு ஆளை நியமிக்கலாம் என்று முடிவு செய்து, சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறார்.


இந்த ஐடியா, அவரது உற்பத்தித்திறனை அதிகரித்திருக்கிறதாம். பேஸ்புக் பக்கம் போனால், அடிக்க ஆள் வைத்திருக்கும் நபரைப் பற்றி கேள்விப்பட்ட எலோன் மஸ்க், இந்த விஷயத்தை பாராட்டியிருக்கிறார்.



இப்படி தன்னை அடிக்க ஆள் வைத்திருக்கும் நபர், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான மணீஷ் சேத்தி. அவர் தனது இந்த யோசனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வேலையில் தனது உற்பத்தித்திறனை அதிகரிக்க விரும்பிய மணீஷ், தான் பேஸ்புக்கைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை அறைவதற்காக Craigslist என்ற வலைதளத்தில் ஆட்களை தேடினார். அதன் மூலம் காரா என்ற பெண்ணையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.  அறைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு $8 என்ற வீதத்தில் காராவுக்கு மணீஷ் சம்பளம் கொடுக்கிறார். 


சரி, அடி வாங்கினால் வேலையில் திறன் அதிகரிக்குமா? ஆமாம் என்று சொல்கிறார் மணீஷ். தன்னை அறைவதற்கு ஆள் வைத்த பிறகு, மணீஷ் சேத்தியின் உற்பத்தித்திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டதாம்!  இந்த பதிவு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க்கிற்கு தெரியவந்ததும், அவர் ட்விட்டரில் பதிலுக்கு, நெருப்பு ஈமோஜியை பதிலாக அளித்துள்ளார். 



பேஸ்புக்கை பயன்படுத்தும் பலர், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், பேஸ்புக் தங்களுக்கு கவனத்தை சிதறடிக்கும் காரணியாக உள்ளது என்று கூறியுள்ளனர். சமூக ஊடகங்களில் #DeleteFacebook ட்ரெண்ட் ஆன நிகழ்வுகள் உண்டு. ஆனால், எது எப்படி இருந்தாலும், உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களில் ஒன்றாக பேஸ்புக் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.


Also Read | ECG இணைக்கப்பட்ட சூப்பர் Smartwatches இவை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR