வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கூற்று உள்ளது. நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகளையே நாம் அனுபவிக்கிறோம். எனினும் எப்போதும் இப்படி நடப்பதில்லை. நாம் சிலரிடம் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களும் நம்மை காயப்படுத்துவது உண்டு. இப்படித்தான் உலக வழக்கு இருந்து வருகிறது. 


இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும்தான். நாம் அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தால், நமக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால், தேவை இல்லாமல் அவற்றை வம்புக்கு இழுத்தால், அவை திருப்பிக்கொடுக்கும். இல்லையென்றாலும், நம் செயலுக்கான விளைவு நம்மை எப்படியும் தேடி வரும். 


மேலும் படிக்க | 'அம்மாவ அடிக்கக்கூடாது, சொல்லிட்டேன்’ அப்பாவை மிரட்டும் குழந்தை, நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ 


விலங்குகள் தங்களை பாசமுடன் நடத்துபவர்களிடம் தீவிர, ஆரோக்கியமான மற்றும் தன்னலமற்ற முழுமையான அன்பை வெளிப்படுத்துகின்றன. இவற்றுக்கு உதாரணமாக நாம் பல வீடியோக்களை பார்த்துள்ளோம். 


இந்த உண்மையை உறுதிப்படுத்தும் பல சம்பவங்கள் உள்ளன. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளே இதற்கு ஒரு உதாரணம். நாம் அவற்றுக்கு அளிக்கும் பாசத்தை பன்மடங்காக அவை நமக்கு திருப்பித் தருகின்றன. மனித இனத்திற்கும் விலங்குகளுக்கும் இடையிலான மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் இதுவும் ஒன்றாகும்.


சிலர் விலங்குகளைத் துன்புறுத்தி அதன் மூலம் ஒரு விசித்திரமான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள். அதுதான் சாடிசம். தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில், குறுகிய சாலையில் காளை ஓடுவதையும், இருபுறமும் மக்கள் கூட்டம் இருப்பதையும் காண முடிகின்றது. ஒருபுறம் கூட்டத்திற்கு முன்னால் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருக்கிறார்கள். எந்த வித காரணமும் இல்லாமல், அந்த நபர்களில் ஒருவர் ஓடும் காளையின் முதுகில் ஓங்கி அடித்தார். 


காளையின் கழுத்தில் நீண்ட கயிறு கட்டப்பட்டு உள்ளது. கயிற்றின் நீண்ட பகுதி தரையில் விழுந்து, ஓடும் காளையின் வேகத்தில் சாலையில் இழுக்கப்பட்டு செல்கிறது.


காளையை அடித்த நபரின் கால்களில் கயிறு சிக்கிக்கொள்கிறது. காலையின் வேகத்திற்கு இணையாக கயிற்றின் வேகமும் இருப்பதால், அதில் சிக்கிக்கொண்ட நபர் கீழே விழுகிறார். அவர் காளையை அடித்ததற்கு அவருக்கு உடனடி பாடம் புகட்டப்படுகின்றது.


வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ ட்விட்டரில் @GaurangBhardwa1 என்ற பயனர் பக்கத்தில் "உடனடி கர்மா" என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. அந்த மனிதனுக்கு கிடைத்தது அவருக்கு தகுந்த தண்டனைதான் என்பதை ஏறக்குறைய அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். இந்த பழமொழி இங்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ராட்சத மலைப்பாம்பின் மீது சவாரி செய்யும் குட்டிப்பெண்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ