Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில் பாம்புகள் எப்போதுமே ஸ்பெஷல்தான். பாம்பு வீடியோகளுக்கும், அவற்றை பார்ப்பவர்களுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை. உலகின் மிக ஆபத்தான உயிரினமாக பாம்பு கருதப்படுகிறது. பாம்பின் பெயரைக் கேட்டாலே மக்கள் சுயநினைவை இழந்து பயந்து வியர்த்து விடுவார்கள். அடுத்த கணமே அங்கிருந்து ஓடி விடுவார்கள். 


ஆனால், அப்படிப்பட்ட பயத்துக்கு நேர் மாறான ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்தால் நம்புவது கடினம். அப்படி ஒரு காட்சிதான் இந்த வீடியோவில் காணப்படுகின்றது. பாம்பிடம் சிலர் குறும்பாக விளையாடுவதையும் சீண்டுவதயும் நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பாம்புக்கு சிபிஆர் செய்து பாம்பின் உயிரை காப்பாற்றும் காட்சியை நீங்கள் கண்டதுண்டா? அப்படி ஒரு வீடியோதான் இப்போது பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. 


வீடியோவின் துவக்கத்தில் ஒரு பாம்பு மயக்கமாக ஒரு ஒரத்தில் அசைவின்றி கிடப்பதை காண்கிறோம். அப்போது அங்கு ஒரு இளைஞர் வருகிறார். அவர் அந்த பாம்பை கையில் எடுத்து அதை பிடித்துக்கொண்டு அதன் வாயோடு வாய் பொறுத்தி அதற்கு CPR செய்கிறார். அவர் பாம்பின் வாய் வழியாக தனது மூச்சை செலுத்த செலுத்த, பாம்பின் உடலில் அசைவை காண முடிகின்றது. 


இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. குஜராத் வனத்துறை ஊழியர் ஒருவர் பாம்புக்கு CPR கொடுத்து அதன் உயிரைக் காப்பாற்றியதாக தெரிவிக்கபட்டுள்ளது. யஷ் தத்வி என்ற இந்த நபர் வனவிலங்கு பாதுகாப்பாளராக உள்ளார். ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கு சென்றவுடன் அது மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அதற்கு CPR முறையில் ஆக்ஸிஜன் கொடுத்து மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிது சிறிதாக மீண்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மேலும் படிக்க | தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோ


பாம்புக்கு உயிர் கொடுத்த நபரின் வீடியோவை இங்கே காணலாம்: