மெட்ரோ வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வித வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இவை நம்மை சிரிக்க வைப்பதோடு பல சமயம் அதிர்ச்சியையும் அளிக்கின்றன. இப்படி கூட நடக்குமா என நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன. ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பல வினோத நிகழ்வுகள் கூட எப்படியோ வீடியோவாக இணையத்தில் பதிவிடப்பட்டு விடுகிறது. இவை நமது அன்றாட வாழ்விலிருந்து நம்மக்கு ஒரு பிரேக் அளித்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில வீடியோக்கள் நிஜமாகவே நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதன்படி டெல்லி மெட்ரோ பிளாட்பாரத்தில் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதைச் செய்வதற்கான காரணத்தை கேட்டபோது, ​​​​பதிலும் மிகவும் தனித்துவமான முறையில் அவர் கொடுத்துள்ளார்.


மேலும் படிக்க | கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ! 


பிளாட்பாரத்தில் சிறுநீர் கழித்த மனிதன்
தற்போது  வெளியாகியுள்ள வீடியோவில், பிளாட்பாரத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பதை நாம் காணலாம். அவர் சிறுநீர் கழிப்பதை பார்த்து, அருகில் நின்றவர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக கேமராவை எடுத்து வீடியோ எடுத்துள்ளார். அவளிடம் அப்படிச் செய்ததற்கான காரணத்தைக் கேட்க ஆரம்பித்த போது. அந்த ஆண் சரியான நிலையில் இல்லை என்பது தெரிய வந்தது. அதன்படி அவர் பயங்கர போதையில் இருப்பதை நாம் காணலாம். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வேகவாக வைரலாகி வருகின்றது.


வீடியோவை இங்கே பார்க்கவும்



இந்த வீடியோ Instagram இல் vishnurawal_media என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.  இந்த வீடியோவை காணும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது இடத்தில் தனி உரிமை கொண்டாடி இது போன்ற செயலை யாருக்கும் செய்யக்கூடாது என்பதை இந்த ஆண் போன்ற நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ