சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கு சரக்கடித்து பார்த்துள்ளீர்களா? சரக்கடித்த குரங்குகள் செய்யும் லூட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2022, 06:52 PM IST
  • சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
  • கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம்.
  • இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப கலாங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காண முடிகின்றது.

தற்போது குரங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காண்பதற்கு அரிதான ஒரு காட்சி காணக்கிடைக்கிறது. குரங்கு ஒன்று தன் கையில் மதுபாட்டிலை வைத்திருப்பதையும், மரத்தில் அமர்ந்து அது மதுவை குடிப்பதையும் வீடியோவில்  காண முடிகின்றது. அதன் பிறகு மதுவை அருந்தும் குரங்குகள் அடிக்கும் அட்டகாசத்தையும் வீடியோவில் காண முடிகின்றது. குரங்கின் கண்கள் போதையில் சுழல்வது போலவும், மது அருந்திய பின்னர் கார் மீது குரங்குகள் லூட்டி அடிப்பது போலவும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

எனினும், வீடியோவை பார்க்கும்போது, இது எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த வீடியோ வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட வீடியோ என்பது புரிகின்றது. எனினும், வீடியோவை பார்க்க மிகவும் வேடைக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க | பூனையிடம் சிக்கிய பறவையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ! 

சரக்கடித்த குரங்குகள் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மரத்தில் ஏறி குரங்குகள் மது அருந்துவதை காண முடிகின்றது. சிறிது நேரத்தில் ஆங்காங்கே நிற்கும் வாகனங்களையும் இந்த குரங்குகள் துவம்சம் செய்கின்றன. இந்த வீடியோவை பார்த்தாலே பல வீடியோக்களை கலந்து எடிட் செய்து பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது தெளிவாக புரியும். 

குரங்குகளின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

குரங்கு அடித்த லூட்டி 

இந்த வீடியோவில் குரங்குகள் செய்யும் அதிகப்படியான சேட்டையை பொதுவாக நாம் காண முடியாது.  குரங்குகளின் இந்த வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். நெட்டிசன்கள் இதை விரும்பி பார்த்தாலும், இது பல வீடியோக்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றே தோன்றுகிறது. இது கேளிக்கைகாக மட்டுமே பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News