ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைஸர் விநியோகிக்கும் பெண் ரோபோவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வெறுக்கிறது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜவுளிக் கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைஸர் வழங்கும் சேலை கட்டிய பெண் ரோபோவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலால் அத்தியாவசிய தேவையில்லாத அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெரிய ஜவுளிக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. 


இந்நிலையில், கொரோன வைரஸ் பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசம் அணிதல், ஹாண்ட் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை கட்டயமாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 


அதன்படி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஹாண்ட் சானிடைஸர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய வைக்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில், ஒரு பெரிய ஜவுளிக்கடையில் சேலை கட்டிய பெண் ரோபோ ஒன்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தானாக நகர்ந்து சென்று ஹாண்ட் சனிடைஸர் விநியோகிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


ALSO READ | இளைஞருடன் கொஞ்சி விளையாடும் யானையின் கியூட் வீடியோ..!



இதுவரை ஜவுளிக்கடைகளில் அழகான பொம்மைகள் அழகான ஆடை அணிந்து ஆடைகளின் விளம்பரத்துக்கு பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால், தமிழகத்தில் ஒரு பெரிய ஜவுளிக்கடையில் சேலை கட்டிய அழகான பெண் ரோபோ, கடைக்குள் தானாக நகர்ந்து வாடிக்கையாளர்களை நோக்கி சென்று நிற்கிறது. அதன் கைகளில் இருக்கும் ஹாண்ட் சானிடைஸர் பாட்டில் முன்பு வாடிக்கையாளர்கள் கைகளை நீட்டினால் சானிடைஸர் திரவம் வருகிறது. ஜவுளிக்கடையின் இந்த தொழில் நுட்ப யுக்தி அந்த கடையில் வாடிகையாளர்களை ஈர்த்துள்ளது.