உத்தரப்பிரதேச மாநிம் ஜான்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் இருந்த அந்த இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு சிகிச்சைக்கு வந்த அந்த இளைஞனின் காலையே, அவருக்கு தலையணையாக மருத்துவமனை பயன்படுத்தியதாகக் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அவலம் உத்தரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 
அரங்கேறியுள்ளது. 


இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். '


கால் துண்டிக்கப்பட்ட அந்த இளைஞர், தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் குழந்தைகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க முயற்சித்த போது தலைகீழாக வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரது காலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞரின் காலை மருத்துவர்கள் சிகிச்சை செய்து துண்டித்தனர்.


கட்டிலில் படுக்க வைத்திருந்த நிலையில் தலைக்கு தலையணை வழங்காததால் துண்டித்த காலையே தலையணையாக வைத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் படம் பிடித்து சமூக வலை போஸ்ட் செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திட அம்மாநில அரசு உத்தரவிட்டது.