11 அடி பாம்பினை ஒரே கையில் பிடித்து அசத்திய பெண்!
சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
குயின்ஸ்லேண்ட்: சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
ஆஸ்திரேலிய கண்டத்தின் அழகிய கியின்ஸ்லேண்ட் பகுதியில் உள்ளவர் ப்ரைடி மாரே. தொழில் ரீதியில் இவர் ஓர் மின்சாரதுறை பணியாளர், எனினும் இவருக்கம் பாம்புகளுக்கும் இடையேயான நெருக்கம் சற்று அதிகமானது எனலாம்.
பொதுவாக நம் வீட்டினில் தவறுதலாக பாம்பு வந்துவிட்டால், கூச்சலிட்டு பயத்தில் அதனை அடித்தே கொன்றுவிடுவோம். ஆனால் இவர் தன் வீட்டினுள் அனுமதி இன்றி நுழைந்த மலைப்பாம்பினை அழகாக பிடித்து காட்டினில் விடுவதற்கு பார்சலே செய்துவிட்டார்.
இந்த அருமையான காட்சியினை அவர் படம் பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் பிடித்த பாம்புகளில் இது ஒன்றும் முதல் பாம்பு இல்லை. பாம்புகளுடன் நட்புறவாடி வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல பாம்புகளை பிடித்துள்ளார் என தெரிகிறது.
பாம்புகளை பிடிப்பதெற்கென தனி உபகரணங்கள் ஏதும் பயன்படுத்தாமல் தன் சொந்த கைகளினால் பிடித்து வரும் அவரது திறமையினை பார்த்தாலே அது நமக்கு புரிந்துவிடும்.