வீடியோ: 4 அடி உடும்பை விழுங்கும் மலைப்பாம்பு!

நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?
நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? உண்ட பொருட்கள் அனைத்தும் எரிமலை குழம்பு போல வெளியே தெரித்துவிடும்.
அதே நிகழ்வுதான் இங்கும் நடந்துள்ளது, ஆனால் மனிதருக்கு அல்ல... 14 அடி மலைப் பாம்பிற்கு.
தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் ராட்சத மலைப்பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்துள்ளதாக வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நகரமுடியாமல் தவித்த மலைப்பாம்பினை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்க்கு கொண்டு செல்ல முயற்சித்தனர்.
ஆனால் அப்பாம்போ அச்சமயத்தில் தான் விழுங்கிருந்த 4 அடி உடும்பினை மிகவும் சிறமப்பட்டு வெளியோ துப்பியது. அங்கிருந்த மக்கள் இந்த நிகழ்வினை வீடியோவாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றது!