மும்பை: தலைமுடி வளர்ப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் பலருக்கும் தலையாய பெரிய பிரச்சனையாக இருப்பது தலைமுடி வளர்ப்பது அதுவும் தங்கள் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் பலவித முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் அனைவருக்கும் அடர்த்தியான நீண்ட கூந்தல் வளர்கிறதா? என்றால், இல்லை என்று தான் சொல்வோம். ஆனால் இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். 


மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த இளம்பெண் அகன்க்ஷா யாதவின் தலைமுடிமுடியின் நீளம் 3.01 மீட்டர் (9 அடி 10.5 அங்குல அளவு) ஆகும். அவர் 2019 முதல் நாட்டில் சாதனை படைத்து வருகிறார். தற்போது வரை அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 


இவரது பெயர் லிம்கா புத்தகத்தில் 2020-2022 இல் (Limca Book of World Records 2020-2022) சேர்க்கப்பட்டார். அதேபோல இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் (India Book of Records)  அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.


 



ALSO READ |  Watch viral video:'அம்மாவை பார்க்க போறேன்’; நம்பிக்கையுடன் செல்லும் குட்டி யானை..!!


 



ஒரு மருந்து மற்றும் மேலாண்மை நிபுணர், அவரது தலைமுடி ஒரு "ஆசீர்வாதம்" என்று கூறுகிறார்.


"எனது தலைமுடிக்காக தேசிய பட்டத்தை வெல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. எனது பெயர் லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி”என்று யாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். 


நீண்ட தலைமுடியை எப்படி பராமரிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டபோது, "​நான் ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் தலைமுடியைக் கழுவுவதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ செலவழிக்க மாட்டேன்" என்றார்.


ALSO READ |  Viral Video: முத்தம் மூலம் அன்பை பரிமாறிக் கொள்ளும் குட்டி யானைகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR