இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவை போல பந்துவீச முயற்சிக்கும் மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் ஜூலை 10 தொடங்கியது. மழையின் காரணமாக அன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு ஜூலை 11 அன்று (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. 


இதையடுத்து 240 என்ற எளிய இலக்கை எட்டிப்பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதியோடு வெளியேறியது. இருந்தாலும், இந்திய வீரர்கள் பலரும் தங்களின் திறமையாக விளையாட்டை உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா போன்றவர்கள் அதிக கவனம் ஈர்த்தனர்.


குறிப்பாக, ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வீரரான ஜஸ்பிரீட் பும்ராவின் பந்துவீச்சு பாணி வித்தியாசமானது. அவரது பந்துவீச்சு பாணியை இளைஞர்கள் பின்பற்றுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், மூதாட்டி ஒருவர் பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.


பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட மூதாட்டி அவரைப்போல பந்துவீச ஓடிவரும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ஜஸ்ப்ரீத் பும்ராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நாளை இனிமையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.