'Meet the Venkaboys': டிராவிட்டின் சுள்ளென்ற கோபத்திற்குப் பிறகு, இளைஞர் குழு ஒன்றின் கிரிக்கெட் புனைவுகள் இணையத்தில் வைரலாகின்றான.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை யாரும் பார்த்திராத ராகுல் டிராவிடின் ‘angry’ அவதாரத்திற்குப் பிறகு, வெங்கடேஷ் பிரசாத்தின் புதிய பாய்பேண்ட் “வெங்கபாய்ஸ்” இணையத்தை புயலாய் தாக்கியுள்ளது. 'Meet the Venkaboys' விளம்பரத்தில், மணீந்தர் சிங், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் சபா கரீம் ஆகியோருடன் வெங்கடேஷ் பிரசாத் ஒரு பாடலை பாடுகிறார்.



பெங்களூரை தளமாகக் கொண்ட கிரெடிட் கார்டு பில் கட்டணம் செலுத்தும் தளத்திற்கான விளம்பரத்தில் இடம்பெறும் நடிகர் ஜிம் சர்ப் (Jim Sarbh), மேடையில் வழங்கப்படும் வெகுமதிகளை "உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்" இடம்பெறும் பாய்பேண்டுடன் (boyband) ஒப்பிடுகிறார். விளம்பரத்தில், "90 களில், நாங்கள் உண்மையான OG களாக இருந்தோம்" என்று "வெங்கபாய்ஸ்" பாடுவதைக் காணலாம்.



இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, "கிரிக்கெட் களத்தில் ஒரு பயிற்சியாளர்காக கேட்டிருக்கிறேன், தற்போது, களத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும்போது நீங்கள் பாடுவதைக் கேட்கிறேன். Venky bhai.... இது ஒரு பயணம்" என்று கவித்துவமான வரிகளால் Venky bhaiக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.


Also Read | IPL 2021: CSK vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR