WATCH: குப்பை இல்லாடியும் நாங்க குப்பையை கொட்டி க்ளீன் செய்வோம்...!
தூய்மையான இந்தியா திட்டத்திற்காக குப்பை இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி சுத்தம் செய்யும் அமைச்சர்கள்..!
தூய்மையான இந்தியா திட்டத்திற்காக குப்பை இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி சுத்தம் செய்யும் அமைச்சர்கள்..!
தூய்மையான இந்தியாவை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், தூய்மையே சேவை என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கிவைத்தார். இதற்காக காணொலிக் காட்சி மூலம் தொழிலதிபர் ரத்தன் டாடா, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது, தூய்மை இந்தியா திட்டத்தில் தானும் ஒரு பிரஜையாக பங்கெடுத்துக் கொண்டதாக அமிதாப் பச்சன் அப்போது குறிப்பிட்டார். மும்பையில் கடற்கரையை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டு, பல்வேறு துப்புரவுத் திட்டங்களில் தாம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சி அமைச்சர்கள் அனைவரும் துடிப்புடன் தனகளது பகுதியில் தூய்மையான இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் பிஷுரம்பூர் பகுதியில் உள்ள இரயில் நிலையத்தில் அமைச்சர்கள் சில துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, குப்பை இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி அதை சுத்தம் செய்யும் சம்பவம் குறித்து வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், இரயில் நிலையத்தில் குப்பை இல்லாத இடத்தில் ஒரு இளைஞர் குப்பையை கொட்டுகிறார். அதை மற்ற அமைச்சர்கள் அனைவரும் சுத்தம் செய்கின்றனர். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வைரலாக பரவியது மட்டும் இன்றி சர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.