குழந்தைகளை காரில் ஏற்றாமலேயே அவர்களை பள்ளியில் டிராப் செய்ய சென்ற தாயின் வீடியோ வைரலாக பரவி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், குழந்தைகள் காரில் அறிவிட்டார்களா என்பதை பார்க்காமலே பள்ளியில் குழந்தைகளை விட சென்ற அம்மாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


தினமும் காலையில் எழுந்து குழந்தைகளை எழுப்பி, அவர்களுக்குச் சாப்பாடு செய்து. அவர்களைத் தயார் செய்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்குள் தாயின் உயிரே போய் விடுகிறது. இதை அடுத்து, அவர்கள் எல்லாம் சென்ற பின்பு வீட்டு வேலை சரி அதையும் முடித்து விட்டு ஓய்வு எடுக்கலாம் என்றால் பள்ளி முடிந்து பிள்ளைகள் வந்துவிடுவார்கள். பின்பு அவர்களுக்கு உணவு, அவர்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பது என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை வேலைகளைச் செய்யும் தாய்க்கு மறதி ஏற்படுவது சாதாரணம் தான். 


ஆனால், ஒரு தாய் தன் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி விட்டு அவர்களை வாகனத்தில் கூட்டிச் சென்று விடக் காரை எடுத்துவிட்டு பள்ளிக்குச் சென்று பின்னால் பார்த்தபோது தான் தெரிந்தது தான் குழந்தைகளை வாகனத்திலேயே ஏற்ற வில்லை. குழந்தைகளை ஏற்றாமலேயே பள்ளிக்குச் சென்ற பின்புதான் அவர் வாகனத்தில் குழந்தைகள் இல்லாததைக் கவனித்தார். இதை அவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.