பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போன், வீடியோ கேம் என பிஸியாக இருந்தால், அவர்களை அடித்து துன்புறுத்தும் பெற்றோரை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் பிளிப்பென்ய்ஸ் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர் பிஸியாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைக்கு அன்பாக சோறு ஊட்டுகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பிளிப்பெய்ன்ஸ் நாட்டின் காப்நாவுட்டன் பகுதியை சேர்ந்த 14-வயது சிறுவன் ஒருவன் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக விளையாடி வருகின்றார். நெடுநேரமாக விளையாட்டில் மூழ்கியிருக்கும் அருக்கு அவரது தாய் லிய்பெத் மார்வெல் கார்சியா உணவு அளிக்கும் விதமாக தட்டில் சாப்பாடுடன் சிறுவனது விளையாட்டு நிலையத்திற்கே சென்று உணவை ஊட்டுகின்றார்.


கிடைக்கெப்பெற்ற தகவல்களின் படி சிறுவன் "Rules of Survival" என்னும் கணினி விளையாட்டை ஆர்வமாக விளையாடியதாக தெரிகிறது. 


கார்சியா தனது மகனுக்கு உணவு அளிக்கும் போது, தன் மகனை பார்த்து "உன்னிடன் இன்று நிறைய பணம் இருக்கின்றது, இதனை கொண்டு நாளை வரை நீ விளையாடலாம். குறிப்பாக இயற்கை உபாதைகளை கழிக்க கூட இடைவெளி எடுக்காமல் விளையாடலாம். உனது நிலைமையை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது" என வருத்தம் தெரிவிக்கின்றார்.


கார்சியா இச்சம்பவத்தின் வீடியோவினை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவானது பகிரப்பட்ட தருணத்தில் இருந்து சுமார் 2 தினங்களுக்கு முன்னதாகவே 44,000 லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.


இச்சம்பவத்தின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...