‘அதே கண்கள்’ தொலைக்காட்சி தொடரின் கவர்ச்சி வில்லி மோகனாவின் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் போஜ்புரி சிஸ்லர் மோனாலிசா. தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது வீடியோ, புகைப்படங்கள் மூலம் காட்சி தருபவர், அந்த வகையில் தற்போது அவர் புதிய புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.


போஜ்புரி துறையில் சேர்ந்த நடிகையாக வலம் வருபவர் மோனாலிசா, இப்போது அவர் தொழில்துறையில் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட போஜ்புரி நடிகருடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.



மோனலிசா எனப்படும் மோகனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அதே கண்கள்(Nazar)'-ல் காணப்படுகிறார். இந்த தொடரில் வில்லி கதாப்பாத்திரம் ஏற்றுள்ள மோனலிசா சமீபத்தில் சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருதை (Stardust Award) பெற்றுள்ளார். அப்பொழுது தனது திரைப் பயணத்தை பற்றி அவர் பேசுகையில்., “2016, நான் இந்திய தொலைக்காட்சியில் நுழைந்த ஆண்டு… திரைத்துறையின் கலவையான உணர்வுகளை பார்த்த போது, உற்சாகம், பதட்டம் மற்றும் எனது எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு பயம் வந்தது. மிகவும் பிரபலமான இரண்டு ரியாலிட்டி ஷோக்களில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தேன். அந்த நாட்கள் எவ்வாறு கடந்தன என்பது எனக்குத் தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



அன்டாரா பிஸ்வாஸ் என இயற்பெயர் கொண்ட மோனாஇலசா நவம்பர் 21, 1982-ல் பிறந்தார். அவரது திரைப் பெயரான "மோனாலிசா" மூலம் நன்கு அறியப்படும் ஒரு இந்திய நடிகையான இவர் 125-க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 2016-ல் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 10 (Big Boss 10)-ன் போட்டியாளராக பங்கேற்றார். எனினும் அவரது 'அதே கண்கள்(Nazar)' தொடர் அவருக்கு அதிகளவு பாராட்டுகளை பெற்று தந்தது.