கீரி - பாம்பு இரண்டுக்கும் பகை என்பது நாம் காலம்காலமாக கேட்டு வரும் ஒரு விஷயம்.  கீரிகள் நிறைந்திருக்கும் இடங்களில் பாம்புகள் வராது என்றும் கூறுவதுண்டு.  எதிர்பாராதவிதமாக பாம்பு மற்றும் கீரி இரண்டும் சந்தித்துக்கொண்டால் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு இறுதியில் பாம்பை கீரி கொன்றுவிடும்.  பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கிவிட்டு பின்னர் அது களைத்ததும், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடுமாம்.  அதேசமயம் பாம்பு கடித்து கீரி சாகாது என்ற ஒரு விஷயமும் கூறப்படுகிறது, ஏனெனில் கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதாம். இதனால் கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சீண்டினால் சீறுவேன்! சீறினால் சீண்டுவேன்! பாம்புகளுடன் மல்லுக்கு நிற்கும் இளைஞன்...


இவை இரண்டிற்கும் நடக்கும் சண்டை பார்ப்பதற்கு அச்சமாக இருக்கும், தற்போது அப்படி ஒரு நிகழ்வு தான் இணையத்தில் பரவி பலரையும் அச்சத்தில் உறைய வைத்து இருக்கிறது. இந்த வீடியோவானது ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது, வீடியோவில் பாறைக்கு அருகே ஒரு பெரிய பாம்பு வாலை சுருட்டிக்கொண்டு படமெடுத்து நிற்பதை காணலாம்.  அதற்கு நேரெதிரே ஒரு கீரியும் உள்ளது, அந்த கீரி பாம்பை நோக்கி பாய்கிறது.  அந்த பாம்பும் தனது வாயை பிளந்து பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி நீட்டி கீரியை பார்த்து சீருகிறது.  பின்னர் அந்த பாம்பு மண் தரையில் சரிந்து விழுகிறது, அதை விடாமல் கீரியும் பின்னாடியே பாம்பை துரத்திக்கொண்டு செல்கிறது.  


 



இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதற்கிணங்க சீறிக்கொண்டு இருக்கின்றன.  மீண்டும் கீரி பாம்பின் வாலை கடித்துவிட்டு பாம்பு வேகமாக வளைந்து நெளிந்து ஓட, கீரியும் விடாமல் விரட்டிக்கொண்டு செல்கிறது, இறுதியாக பாம்பும் ஓடிக்கொண்டே இறுதியில் கீரியை பார்த்து படமெடுத்து நிற்பதுடன் இந்த வீடியோ நிறைவு பெறுகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமர செய்து இருக்கிறது.  மார்ச்-18 ம் தேதி ஃபிகன் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவுடன் 'வலிமையான இதயம்' என்கிற கேப்ஷனும் சேர்த்து பதவிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர், இதற்கு பலரும் கமெண்ட் செய்தும், வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | ஜாக்கிசான் போல காற்றில் பாய்ந்த தேவாங்கு! வைரல் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR