`அந்த மனசுதாங்க கடவுள்!!`: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ
Viral Video: குரங்கை பற்றிய ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்தால் நம்மால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
விலங்கு வீடியோக்கள் இணையவாசிகளை அதிகம் கவர்கின்றன. விலங்குகளின் உலகில் நாம் அறியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களின் மூலமாக நாம் காண்கிறோம். இவற்றில் பல ஆச்சரியப்படுத்தும் வகையிலும் அமைந்து விடுகின்றன.
குரங்கை பற்றிய அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்தால் நம்மால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. குரங்குகள் பொதுவாக அதிக சேட்டை செய்யும் விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. அவை ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அன்பும், பாசமும் கிடைத்தால் அவையும் மனிதர்களுக்கு இடையே சகஜமாக பழகும் என்பதை நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அன்பின் மொழியை விலங்குகளும் நன்றாக புரிந்து கொள்கின்றன என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
கோவில் வளாகம் ஒன்றில் பக்தர்களுக்கு அன்னதானம் நடப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த இடத்திற்கு ஒரு குரங்கு வருகிறது. பக்தர்கள் அனைவரும் அங்கு உணவு உட்கொள்கிறார்கள். அங்கு வரும் குரங்கு ஒரு வயதான நபரின் தட்டுக்கு அருகில் சென்று அவருக்கு முன் அமர்கிறது. அந்த முதியவர் சற்றும் பதற்றம் அடையாமல் தன் தட்டில் உள்ள ஒரு பங்கை குரங்கிற்காக வைத்துவிட்டு தன் பங்கை அவர் சாப்பிட ஆரம்பிக்கிறார். குரங்கும் தனக்காக ஒதுக்கப்பட்ட சாதத்தை சாப்பிடுகிறது. குரங்கும் அந்த மனிதரும் ஒரே தட்டில் மிகவும் அமைதியாக சாப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கிறது.
அப்போது பரிமாறும் நபர் ஒருவர் பின்னால் வரவே அந்த குரங்கு திடீரென்று பயந்து விடுகிறது. ஆனால் அந்த முதியவர் அந்த நபரிடம் அருகில் வராமல் இருக்குமாறு சைகை காண்பிக்கிறார். மேலும் அந்தக் குரங்கையும் பயப்படாத வண்ணம் அன்பாக சமாதானப்படுத்தி தடவி கொடுக்கிறார். சமாதானம் ஆகும் குரங்கு மீண்டும் தட்டில் இருந்து உணவை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.
குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்: